என் மகளையாவது விட்டுவிடுங்கள் – காமவெறியர்களிடம் ஒரு தாயின் கதறல் நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் தாய் மற்றும் மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கடந்த 15ம் திகதி சடலமாக சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார்.

இதைப் பார்த்த உடன் அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த பொலிஸார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

அந்த சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஏற்கனவே காஷ்மீர் சிறுமி கொலைவழக்கு தேசிய அளவிலான பிரச்சனையை ஏற்படுத்தியதால் இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன, அந்த சிறுமியின் தாய் கணவரை இழந்தவர்.

மத்திய பிரதேசத்தில் குக்கிராமத்தில் வசித்துவந்த அவரை ஒரு நபர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஆட்கள் தேவை எனக் கூறி 35000 ரூபாய் கொடுத்து குழந்தையுடன் அவர்களை சூரத் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சென்றதும் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு கூட்டி வந்த அந்த கொடூர நபர், சிறுமியின் தாயை ஒரு வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அவர் கூச்சலிட்டு கதறி அழுது மறுப்பு தெரிவிக்கையில், சிறுமியை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார், பின்னர் தன் நன்பர்களுடன் சேர்ந்து சிறுமியையும் சீரழித்துள்ளார்கள்.

ஏழ்மையில் இருந்த எங்களுக்கு வேலை அளிப்பதாக கூறி அழைத்துவந்த பின்னர் துரோகம் செய்யாதீர்கள், உங்கள் பணத்தை கூட கொடுத்துவிடுகிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என அந்த பெண் சிறுமியுடன் கெஞ்சி கதறியுள்ளார்.

ஆனால் சிறிதும் இரக்கம் இல்லாத அவர்கள் 4 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்து வன்கொடுமை செய்த பின்னர் காட்டுமிராண்டி தனமாக அந்த சிறுமியை கட்டையால் 86 முறை அடித்தே கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் சிறுமியின் உடலை மைதானத்தில் அவர்கள் வீசி சென்றுள்ளனர், சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் அடையாளம் ஒரு பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது.

தற்போது அந்த சடலம் சிறுமியின் தாயினுடையதா என்று டிஎன்ஏ பயன்படுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர்.

இந்த கொடும் செயலை செய்தவனையும் அவனது இரண்டு நண்பர்களையும் பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இந்தியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி சீரழிக்கப்படுவதாக சி.ஆர்.ஒய் எனும் குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

வட இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த இந்த குற்ற செயல்கள், 2016ம் ஆண்டில் 1,06,958 ஆக அதிகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]