என் மகன் தப்பு பண்ணல- என்னை கொன்னுடுங்க பொள்ளாச்சி புகாரில் முக்கிய புள்ளியின் தாயின் கதறல் வீடியோ உள்ளே

தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய் நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான தகவல்கள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசு நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த அவரின் தாய் லதா ஆவேசமடைந்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள் சிலர், உன் பையன் பணத்திமிரால் இப்படி செய்துட்டானே என்று லதாவை பார்த்து நேரடியாகவே பேசினார்கள். ஒரு பக்கம் ஜாமீன் இல்லை, மற்றொரு பக்கம் பொதுமக்களின் வசை சொற்களால் லதா டென்ஷனாகி விட்டார்.

அதனால் ஆவேசமான அவர், யார் தப்பு செய்தது? என் மகன் எந்த தப்பும் பண்ணல. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க. என் பையன் மேல போட்டது ஒரு பொய் வழக்கு.

அவனைக் கைதுசெய்து துன்புறுத்தி வருகின்றனர், எல்லோரும் சேர்ந்து என்னை கொன்னுடுங்க என ஆவேசமாக பேச அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]