என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்ல நீ மட்டும் ஏன்? தாக்கும் பிரபலம்!

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் இன்று வெளியாகியது. இந்த இரண்டு படங்களையும் ரஜினி, அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த படங்களை தாக்கும் விதத்தில் வசனம் உள்ள போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ”என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்ல நீ மட்டும் ஏன்” என உள்ளது.

இது தாதா 87 படத்தின் போஸ்டர் தான். இந்த படத்தின் நாயகன் சாருஹாசன். இவர் கமல்ஹாசனின் சகோதரர். படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் ஜனகராஜும் நடித்துள்ளனர்.

இந்த படம் எதிர்வரும் 26 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]