என் காலத்திலேயும் பாலியல் தொல்லைகள் இருந்தன- மனம் திறந்து பேசிய நடிகை மீனா

வெகு காலம் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளில் ஒருவரான மீனா, அவரது காலத்திலும் பாலியல் தொல்லைகள் இருந்தது என்று கூறியுள்ளார்.

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று பாலிவுட் நடிகைகள் தொடங்கி, தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து சினிமா துறையில் உள்ள நடிகைகளும் குற்றம்சாட்டி வருகிறார்.

அண்மையில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தனக்கு படவாய்ப்பு கொடுப்பதாக கூறி பலப்பேர் என்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறியது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னணி நடிகைகள் பலரும் இதுகுறித்து தைரியமாக வெளியே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை மீனா தான் அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியுள்ளார்.

எல்லா துறைகளிளேயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட டீல் பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]