முகப்பு News என்னை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும்: டிரம்ப் எச்சரிக்கை

என்னை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும்: டிரம்ப் எச்சரிக்கை

என்னை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் எல்லா வேலையையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உட்பட 2 பெண்கள், டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர்.

அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக முறைப்பாடு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதோடு, டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்துள்ள நிலையில், டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட சம்பவங்களால் டிரம்ப் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையிலேயே மேற்கண்ட விவகாரம் தொடர்பாக இவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com