என்னை கொலை செய்ய முயற்சித்தவர்களுடன் சரத்பொன்சேகாவிற்கு தொடர்பு – மைத்திரி

என்னை கொலை செய்ய முயற்சித்தவர்களுடன் சரத்பொன்சேகாவிற்கு தொடர்பு

மஹிந்தவுடன் இணைந்தது குறித்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சியொன்று தீட்டப்பட்டிருந்தது, அதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தீர்மானித்ததாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னை கொல்வதற்காக இடம்பெற்ற சதி முயற்சிகள் குறித்த விசாரணையின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தவேளையிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை மறைத்துவிட்டனர் என சிறிசேன தெரிவித்தார்.

அவ்விசாரணைகளின் போது, மேலும் சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பிருக்கிறது. இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதால் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை என்றார்.

விரைவில் முழுமையான விபரங்களை வெளியிடுவேன் அப்போது மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]