‘என்னையும் ஹீரோவா புரமோட் பண்ணனும்’! – ஹேன்ட்ஸம் ஹீரோவின் நிபந்தனை

 

ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் அந்த ஹேன்ட்சம் ஹீரோ தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களாகவும் லீட் கேரக்டர்களாகவும் தான் பார்த்து நடிக்கிறார். ஆனால் ஜெயமான ஹீரோவுடன் ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்திருக்கிறார்.
நடிக்க ஒப்புக்கொள்ளும்போது எதுவும் சொல்லாமல் ஓகே சொன்ன நடிகர் இப்போது புரமோஷன்களில் அதிகம் தலையிடுகிறாராம்.

புரமோஷன்களில் ஹீரோவுக்கு சமமாக தன்னுடைய பெயரும் வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம். இயக்குநரிடம் கேட்டால் ஷூட்டிங்கில் இருந்தே படாத பாடு படுறேன் என்று புலம்புகிறார்.
இனிமேல் டபுள் ஹீரோ, வில்லன் வேடங்களுக்கு நோ என்றும் சொல்லிவிடுகிறாராம்.