என்னையும் மகிந்தவுடன் இணையுமாறு வற்புறுத்தினர்- மனோ கணேசன் வெளியிட்ட பகீர் தகவல்

“புலம்பெயர் தமிழர்கள் என்னை மகிந்தவுடன் இணையுமாறு வற்புறுத்தினர் , ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் நிருபிக்கும் தேவை உள்ளதால் அவருக்கு ஆதரவாக ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறிய மனோகணேசன்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு, மலையக மக்களை ஏமாற்றிவிட்டார். இப்படி ஒரு அரசியல் மாற்றம் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை இணைந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் , அதுமட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் கூட என்னை மஹிந்தவுடன் இணையுமாறு கூறினர். எனக்கு அது கவலையாக இருந்தது. அதனை உடனடியாக நான் மறுத்து விட்டேன்.

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது . இதனை நாங்கள் முறியடித்து வெல்லுவோம்” என கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மனோ இந்த கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]