என்னம்மா இப்படி பண்றீங்களேமா! – சமந்தா

சமந்தா மிகவும் குஷியில் இருக்கிறார். அவரின் இருபடங்கள் ஒரேநாளில் வெளியாகியிருந்தன. அவ்விரண்டு படமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்ததாவது,

பத்திரிக்கையாளரொருவர் நீங்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே என வினவியபோது?

சமந்தா உடனே இல்லை என பதிலளித்தார். நான் யுடர்ன் படத்தை தயாரிப்பதாக வந்த செய்திகளில் ஒருதுளியெனும் உண்மை இல்லை. சும்மா வதந்திகளைக் கிளப்பாதீர்கள். அந்த படத்தை வேறு ஒருவர் தயாரிக்கிறார். அதில் நான் பத்திரிகையாளராக வருகிறேன்.

என்னம்மா இப்படி பண்றீங்களேமா

திருமணத்துக்கு பின் அதிகமாக கவர்ச்சி படங்கள் வெளியிடுவது குறித்து கேட்கப்பட்டதற்கு?

அது என் உரிமை. அதில் தலையிடவோ, அதை விமர்சிக்கவோ யாருக்கும் உரிமையும் இல்லை, அதிகாரமும் இல்லை என்றார். எனக்கு என்னுடைய எல்லை நன்றாகவே தெரியும் என சாந்தமாக பதிலளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]