என்னது சுஜாவின் கன்னத்தில் அறையா?? அது யாரு தெரியுமா??

பிரபல தொலைக்காட்சியில் போன வருடம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்கள்.

இந்த நிலையில், அண்மையில் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு விருது கொடுக்கப்பட்டுள்ளது அதனால் சில சர்ச்சைகளும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து தற்போது சுஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இரவிற்கும் ஆயிரம் கண்கள் படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் இவர் போல்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தில் மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவது உண்டா என்று கேட்கும்போது சுஜா கூறியது இது தான்: அருநிதி சார் ஒரு காட்சியில் என்னை அடிப்பார். அந்த காட்சியில் என்னை அடித்தது எனக்கு மிகவும் வலித்தது. இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]