தமிழக ரசிகர்கள் உள்ளங்களில்  தற்போது காட்டுத்  தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும்  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான். சமீபத்தில் வெளியான  இந்த படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலும் ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், – மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது  குறிப்பிடத்தக்கது. ‘தள்ளி போகாதே’ புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின்  மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான ‘மறு வார்த்தை’ பாடல் , இசை பிரியர்கள் மட்டுமின்றி  பொதுவான ரசிகர்களின்  உள்ளங்களையும் கவர்ந்து சென்று  இருக்கின்றது.

எனை நோக்கி பாயும் தோட்டா

Mr. X அவர்களை எப்படியாவது கண்டு பிடித்தாக வேண்டும் என்று ரசிகர்கள்  இருக்கும் இந்த நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர்  ‘Mr. X’ அவர்களை சமுக வலைத்தளங்களுக்கு அறிமுகபடுத்தி இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில்  ‘நான் பிழைப்பேனோ’  என்னும்  இந்த படத்தின் மற்றொரு பாடல்  வெளியாக  இருக்கின்றது. ஆகவே இந்த  மூன்று நாட்கள் வரை தான் Mr. X சமுக வலைத்தளங்களில் செயல்படுவார்.

Mr. X இன் டிவிட்டர் கணக்கு:  @Mr_X_Music
Mr. X இன் பேஸ்புக் பக்கம்:   https://www.facebook.com/MrXOffl/⁠⁠⁠⁠

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]