எனது வாழ்நாளில் மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- ஜனாதிபதி விடாபிடி

எனது வாழ்நாளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களிடம் ஜனாதிபதியை இன்று சந்தித்தனர். அவர்களிடமே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி சட்டபூர்வமாக பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு என்னிடம் கொண்டுவர முடியாது எனத் தெளிவாகக் கூறியுள்ளேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தின் கீழ் இடம்பெற்ற அனைத்து ஊழல்கள் மற்றும் மோசடிகளை ஆராய புதிய ஆணைக்குழுவை நியமிக்க உள்ளேன். பிணை முறி மோசடி ஊழலை ஆராய்ந்த ஆணைக்குழுவைவிட இந்த ஆணைக்குழு மேலும் பல மோசடிகளைக் கண்டறியும் என நம்புகின்றேன்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]