“எனது மூளையே எனக்கு எதிரி’ பெண் தற்கொலை

பெற்றோர் மற்றும் மகனுடன் ஐந்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் நேற்றிரவு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரவு 10.45 மணியளவில் வழக்கம்போல், பணி முடிந்து வீடு திரும்பியுள்ள ராதிகா என்று பெண், கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை வீட்டினுள் வைத்தவர் நேராக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் மொட்டை மாடியில் இருந்து அவர் கீழே குதித்துள்ளார். படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ராதிகாவின் ஹேண்ட்பேக்கில் இருந்து அவரது கடைசிக் கடிதம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

அதில் அவர், ‘மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமல்ல. எனது மூளையே எனக்கு எதிரி’ எனக் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]