எனது மனைவி குளித்து ஒரு வருடம் ஆகிவிட்டது- விவாகரத்து பெற்று தாருங்கள் என கதறி அழுத கணவன்

இந்த உலகில் உள்ள திருமணமானவர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அந்த வகையில் உள்ள பிரச்சனைகளை திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களிடம் கேட்டால் அவரவர் எண்ணத்தில் உள்ள., வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதில் வித்தியாசமாக இருக்கும் சிலர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விவாகரத்து பெற்று கொள்கின்றனர்.

அந்த வகையில்., இந்தியாவில் உள்ள பீகாரில் நடைபெற்றுள்ள சம்பவமானது பெரும் ஆச்சர்யத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மொசாடா மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவருக்கு., அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு., ஓராண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்கள் இருவரும் வாழ்க்கையை நடத்தி வந்த கடந்த ஓராண்டாக அந்த இளைஞரின் மனைவி ஒரு நாள் கூட குளித்தது இல்லையாம்., இதனை தனது மனைவியிடம் பல முறை அன்பாக எடுத்து கூறி குளிக்க சொல்லி வற்புறுத்தி அந்த பெண்ணிடம் காலில் விழாத குறையாக கதறியுள்ளார். இதற்க்கெல்லாம் அவர் செவிசாய்க்காமல் இருந்து வரவே. ஆத்திரமடைந்த கணவர் மனைவியை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி., உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும்., அவரிடம் இருந்து தம்மை காக்குமாறும் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து., பெண்ணை கொடுமை படுத்துவாயா? என்று கண்டிக்க முயற்சித்துள்ளனர்.

அந்த நேரத்தில்., தனது மனைவியின் செயல்பாடுகளை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து., தனக்கும் தனது மனைவிக்கும் திருமணம் முடிந்து ஓராண்டு காலம் ஆகின்றது., இதனை நாட்களில் அவர் ஒரு நாள் கூட குளித்ததே இல்லை., இதனை பல முறை அவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்வதே இல்லை., அவர் மீது கடுமையான துர்நாற்றம் வீசுகிறது., எனக்கு உடனடியாக விவகாரத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி அவருடைய நடவடிக்கையை மாற்றி குளிக்க கூறி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அவரது ஒரு மாத அவகாசத்தில் நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை என்றால் பின்னர் அதற்குரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]