எனது படம் மொட்டுக்கே சொந்தம் – மஹிந்த

“பொதுஜன முன்னணிக்கே எனது புகைப்படம் உரித்துடையது, எனினும், வாக்குக் கேட்க விரும்புபவர்கள் தன்டைய புகைப்படத்தைப் பயன்படுத்த முடியும்” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

அத்துடன், “நாட்டை ஒழுங்காக கொண்டுநடாத்த முடியாதவர்கள் கிராமத்தின் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கோருவது வேடிக்கையானது” எனவும் அவர் தெரித்தார்.

மேலும், “மொட்டுக்கு வாக்களிக்கும் அனைவரும் இந்த அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்பதே அர்த்தம்” என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]