எனது குடியுரிமை பறித்தாலும் மக்களுடன் போராடுவேன்- மஹிந்த

எனது குடியுரிமையை இல்லாமல் செய்தாலும் மக்களுடன் இணைந்து நான் எடுத்துச் செல்லும் நடவடிக்கையை கைவிட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெல்லவாய நகரில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எனது குடியுரிமையைப் பறிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் பார்த்தோம். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார்கள். இருப்பினும், அவர் முன்னெடுத்துச் சென்ற மக்கள் போராட்டத்தைக் கைவிட வில்லை. மக்களுக்காக நான் எப்போதும் செயற்படுவேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.