எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது

எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹிங்குராக்கொட இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றத்தை 113 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். அதன்பின்னர் ஜனாதிபதியினதும், அரசினதும் ஆட்டம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணி கூறிவருகிறது. அது வெறும் கனவு மாத்திரமே.

நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், வெற்றுகோசமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

நல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டில் சிலர்; அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]