எனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலை- மலர் தம்பதியினர். இவர்களின் மகள் சௌமியா(17), இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி.

கடந்த 5 ஆம் திகதி இயற்கை அழைத்ததால் காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் – சதீஷ் ஆகிய இருவரும் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

தன்னைக் காத்துக் கொள்ள மாணவி நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த இவர்கள்சௌமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் பொலிஸார் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு நாட்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சௌமியாயாவை தருமபுரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சௌமியா பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அண்ணன் முறையாவார்கள். அவர்கள் இருவரும் என்னை காட்டுக்குள் வைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர், ஒருவர் என்னை பிடித்துக்கொள்ள மற்றொருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கதறினேன், எனக்கு மாதவிடாய் காலம், என்னை விட்டுவிடுங்கள் என அவர்களிடம் கதறியும் கேட்கவில்லை என அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் பதறவைக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]