எனக்கும் எனது ரசிகர்களுக்கு எந்த வித அரசியல் நோக்கம் இல்லை – அஜித்தின் திட்டவட்ட அறிவிப்பு

கடந்த ஞயிற்று கிழமை (ஜனவரி 20) பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார். குறிப்பாக தமிழிசை விழாவின் பொது பாஜகவில் சேர்ந்த 100 கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களை அவர் புகழ்ந்து பேசினார்.

திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள்.

அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால்,இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் எனக்கும் எனது ரசிகர்களுக்கு எந்த வித அரசியல் நோக்கம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார் அஜித்.

இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை அஜித்தால் ஜெயிச்சுக் காட்ட முடியுமா ? என சவால் விட்டுள்ளார். தமிழிசையின் இந்த சவலால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

எனக்கும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]