எந்தவொரு சவாலையும் ஏற்க தயார்: பீல்ட் மார்ஷல்

வரலாற்றில் இருந்து தான் சவால்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் என்பதால் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்வதாக பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

“பொது வேட்பாளர்” என்பதானது எதிர்பார்த்த விடயங்களை நிறைவேற்ற முடியாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு அவர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.