எது வேண்டுமானாலும் செய்கின்றோம்- தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தொல்லை தருவதாக அகிலவிராஜ் காரிவசம் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, ஆளுங்கட்சியின் பலர் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்று அதிகாலை தனக்கொரு அலைபேசி அழைப்பு வந்ததாகவும், எது வேண்டுமானாலும் செய்கின்றோம். வாக்கெடுப்பின் போது தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு மறுபுறம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்ததாக அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் தமது அலைபேசிகளை துண்டித்து, இருக்குமிடங்களை வெளியே கூறாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி​யுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]