எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

புதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சி நடத்தியிருந்த நிலையில், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து நடைபெறவுள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவாளர்கள் அழைத்துவரப்படவுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]