எதிர்வரும் 27ஆம் திகதி சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு

பூரணை தினமான எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள முழுமையான சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
27ஆம் திகதி இரவு 10.45 முதல் மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை இந்த கிரகணம் இடம்பெறவுள்ளது.

இதனை இலங்கையிலிருந்து பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழக புவியியல் பிரிவின் வானியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இடம்பெறும் இரண்டாவது சந்திர கிரகணமாக இது அமையவுள்ளது. இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் சந்திரகிரணகம் இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]