எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் – வடக்கு முதல்வர்

எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்று வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரிவித்துள்ளார்.

தன் மீது நம்­பிக்­கை­யில்லை எனத் தெரி­வித்து மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வட மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளித்த மனு­வைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டால் தற்­போ­தைய பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்­கொள்ள­லாம்.

அவர்­கள் ஒரு மனுக் கொடுத்­துள்­ள­னர் ஆளு­ந­ரி­டம், அந்த மனு­வைத் திரும்ப வாங்­க­வேண்­டும், இந்­தக் கொந்­த­ளிப்­புத் தானா­கவே நிறுத்­தப்­ப­டும். ஏனென்­றால் மனு­வைத் திரும்­பப் பெற்­ற­வு­டன் அது சம்­பந்­த­மான நட­வ­டிக்கை தொட­ராது. எவ­ருமே அதைப் பற்றி பேச வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எங்­கள் வேலை­கள் நடந்­து­கொண்­டு­போ­கும்.

வடக்கு மாகாண சபை தொடர்­பாக எழுந்துள்ள அர­சி­யல் சிக்­க­லைத் தொடர்ந்து நேற்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய அவர் இவ்வாறு கூறினார்.

நாங்கள் சம்பந்தனுடன் பேசிய விடயங்கள் தொடர்பாகத்தான் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றோம். அறிக்கையில இரண்டு பேரைப் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றது, மற்றைய இருவரைப் பற்றியும் சொல்லவில்லை, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார் சம்பந்தன். அவர்கள் சம்பந்தமான விசாரணை நடத்தப்படவில்லை.

முறைப்பாட்டாளர் வராதபடியால் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஆனால் 7ஆம் திகதி முறைப்பாட்டாளர் சபையில், இன்னொரு விசாரணை நடத்தினால் இருவர் பற்றியும் உரிய சாட்சியம் வழங்க முடியும் என்று கூறினார். அதன் பின்னரும் முறைப்பாடுகள் புதிதாகக் கிடைத்துள்ளன. அதனடிப்படையில்தான் எனது தீர்மானம் அமைந்திருந்தது என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]