எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்று அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிக்கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சபையில் அவதானம் செலுத்திய போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் எம்.ஏ.சுமந்திரனும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]