எதிர்க்கட்சி தலைவரும், வடக்கு முதல்வரும் சந்திப்பு

எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமக்கு இந்த தகவலை வழங்கியுள்ளார்.

உத்தேச மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரனையே நியமிக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறு தாம் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படாவிட்டால், தனித்து செல்வது குறித்து விக்னேஸ்வரன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம், விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ள போதும், அந்த தீர்மானத்துக்கு ஒரு சாரார் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இதுதொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்காக குறித்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]