எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கா? சம்பந்தனுக்கு?- இன்று சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நடைபெறவில்லை.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை எனவும், விரைவில் முடிவைத் தான் அறிவிக்கவுள்ளதாவும் சபாநாயகர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதையடுத்து இறுதி முடிவை இன்று அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். எனினும், இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சை தொடர்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]