முகப்பு News Local News எதிர்க்கட்சித் தலைவர் பதவி – சந்திப்பொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்புக்கள் நடத்தவுள்ளன

எதிர்க்கட்சித் தலைவர் பதவி – சந்திப்பொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்புக்கள் நடத்தவுள்ளன

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்கப்படாமை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்புக்கள் நடத்தவுள்ளன.

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற சம்பிரதாய ரீதியாகவும் யாப்பு ரீதியாகவும் தமக்கு இயலுமை இல்லையென சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com