முகப்பு News India எதிர்காலத்தை கணித்து சொல்லும் கழுதை – அதிர்ச்சியில் மக்கள்

எதிர்காலத்தை கணித்து சொல்லும் கழுதை – அதிர்ச்சியில் மக்கள்

கர்நாடகத்தை சேர்ந்த கழுதை ஒன்று மக்களின் எதிர்காலத்தை சரியாக கணிப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

கர்நாடகாவின் குல்பர்கியை சேர்ந்தவர் கலில் அகமத் கான். இவருக்கு சொந்தமாக பனாலல் என்ற பயிற்சியளிக்கப்பட்ட கழுதை ஒன்று உள்ளது. இந்த கழுதை மக்களின் எதிர்காலத்தை சரியாக கணிப்பாத மக்களிடையே கூறப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கண்காட்சியின் போது எதிர்காலத்தை கணிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தங்களது எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் ஆவலுடன் வரிசையில் காத்துவருகின்றனர். இதற்கென ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் வட்டமாக சுற்றி நின்றுக்கொள்வர். கலில் தனது பனாலல் கழுதையுடன் வட்டதின் நடுவில் நின்றுக்கொள்வார்.

கலில் கேட்கும் ஒவ்வொரு எதிர்கால கேள்விக்கும் கழுதை வட்டத்தை சுற்றி ஒடி யாருக்கு அந்த எதிர்காலம் அமையுமோ அவர்களுக்கு அருகில் சென்று நிற்கும். பனாலலின் எதிர்காலம் கூறும் திறன் மக்களின் வாயை பிளக்கவைப்பதாக கூறுகின்றனர் பார்வையார்கள்.

இதுகுறித்து கலில் கூறுகையில்,

‘ யார் வருங்கால டாக்டர், இன்ஞ்சினியர், யார் நன்றாக படிப்பார், யார் பெற்றோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார், கஞ்சமாக இருப்பது யார், வசதியா இருப்பது யார் என்பதை சரியாக கணித்து சொல்கிறது பனாலல்’ என்றார்.

பனாலலின் இந்த திறமையால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவின் ஹீரோவாகவே மாறிவிட்டது பனாலல் என்றால் மிகையாகாது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com