முகப்பு News Local News எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல்

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல்

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் மேற்கொண்ட ஆய்வு தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்களுடன் எதிர்வரும் சில தினங்களில் கலந்துரையாடி, அதன்போது மேற்கொள்ளப்படும் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இந்தநிலையில், எதிர்கட்சி தலைவர் தொடர்பில், சபாநாயகர் தமது இறுதி தீர்மானத்தை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அறிவிக்க உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர், சபாநாயகர் தமது இறுதி தீர்மானத்தை அறிவிப்பார் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நீல் இத்தவெல நேற்று குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி, ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வாதம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் எழுந்தது.

இந்தநிலையில், அண்மையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி, தமது அணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வேண்டும் என கோரி 69 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com