எண் 7இல் பிறந்தவரா நீங்க? உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?

7 ஆம் எண்னில் பிறந்தவர்கள் பற்றி எண் ஜோதிடம் என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கேது நட்சத்திரம் :- அசுவினி, மகம், மூலம்
இப்போது இல்லற சந்நியாசிகளாக 7-ம் எண்காரர்களைப் பற்றிவிரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப்பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல்கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்றுசோதிட சாத்திரங்கள் கூறுகின்றன.

இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம்,மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும்கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வவல்லமை மிகுத்த எண்ணாக உள்ளது! இவர்களது பேச்சில் எப்போதும்பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7-ம்எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும்,வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும்.

ஆனால் நடுவயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும்கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்தபணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத்திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதைஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.
இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும்.தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள்.இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும்.உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ)ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த7-ம் எண்ணில் பிறந்தவர்களே! இவர்களுக்குச் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப்பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன்எடுத்துரைப்பார்கள்.

பொருளாதார நிலை 7-ம் எண் அன்பர்களுக்குத்திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும்இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும்அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு.கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறுயாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பதுசோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத்தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள்.

7-ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்விஅமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்ததடைப்படும். பெரும்பாலான 7-ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.

பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில்முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக்காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரெனதாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டியதுர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.

ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன்வாழ்க்கையில் போராடுவார்கள். 3-ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன்சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவிஅவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள்.

உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும்தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனைவளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க்கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான்முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள்உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது!

ஒன்பது எண்களிலும் 9-ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதைஅடுத்து இந்த 7-ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும்.இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும்,குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன! பொதுவாகத் தங்கள்மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள்.இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள்.

அடுத்தவர்களின் தூண்டுதலைஎதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும்போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள்.அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள்என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.

இவர்களது தொழில்கள்

இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்தஎண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக,புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின்உரிமையாளர்களாக இருப்பார்கள்.

சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடாபானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்)விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவசம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்தஇலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில் சிறப்பிருக்காது!அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டுஇவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல்கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக்கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டுவியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச்சிறந்தது! பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்குஒத்துவரும்.
ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xeroxகடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்டஎந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்புசம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால்முன்னேறலாம்.

போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும்சிறந்தவை! சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும்சிறந்தவையே!

திருமண வாழ்க்கை

இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத்திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின்திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவதுஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும்அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள்.தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும்,வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் 1, 2, 5, 6ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்லதிருமண வாழ்க்கை அமையும்.

குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில்பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8-ஆந் தேதிபிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவதுசிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும்ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை.பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.

இவர்களது நண்பர்கள்

1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாகஇருப்பார்கள். 2-ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும்,முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்குஒத்துவரும்.
நோய்கள்
1. மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப்பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும்குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்குச் சீரணக்கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடிபாதிப்பு உண்டு. மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்றபல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும்.உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு. எனவே ரசமுள்ள பழங்களைஅடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள்,கொப்புளங்கள் அடிக்கடி வரும். இவர்களுக்கு மண் பாத்திரங்களில்செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும்.இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால்கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

கேது யந்திரம் & கேது & 39

14 9 16
15 13 11
10 17 12

கேது மந்திரம்

பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

எண் 7 சிறப்புப் பலன்கள்

இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7-ம்எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன்என்னும் கிரகத்தைக் குறிப்பாக இருக்கிறது என்று மேல்நாட்டினர்கூறுவர். இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள்.இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள்பக்தி அதிகம் நிறைந்தவர்கள். மனஅமைதி குறைவானவர்கள்.இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டேஇருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெறமுடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும்,தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின்மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும்அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ,ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள்,இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே! 2-ம் எண்ணின்மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில்எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்துஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம்,தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும்.தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள்.

7-ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி,இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களதுமதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில்செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின்சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்சஇரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின்கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும்உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரியசெயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள்.

இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு! மிக எளிதாகஎவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையானஉழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும்இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும்.இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கைஉடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள்.இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.

இல்லறத்துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள். வார்த்தைகளை இவர்கள் நிதானமாகவே பேசுவார்கள். யாரிடமும் கலகலப்பாக இருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுவார்கள். ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்தபொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள். இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும்ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும். திருமண வாழ்விலும்பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறுபிரச்சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளைவிட்டுப் பிரிய நேரிடும். கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்டகாரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள்.

காவி உடை கட்டிய வேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவது ஒருகாரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும். மகிழ்ச்சியில்லாதவாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே,தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7-ம் எண்காரர்கள்பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும்,விரயங்களும் ஏற்படும். இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப் பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும்.இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும்யோகம் உண்டு.

தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள்.உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கெனஅர்ப்பணம் செய்வார்கள். எவ்வளவு வந்தபோதிலும், தங்களது லட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றிஅடைவார்கள்.
மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமான அமையாது.அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும்அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் மட்டு கலகலப்பாகப்பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6-ம்எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள்.ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள். இவர்கள்அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.

உடல் அமைப்புறி Physical Appearance

இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும்கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை,கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சிலஅன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.

அதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems. இவர்களுக்கு வைடூர்யம் (CAT’S EYE) இரத்தினமே மிகவும்அதிர்ஷ்டகரமானது! சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE)நன்மையளிக்கக்கூடியதே! MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக்கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYEஎனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட தினங்கள் 
ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29-ந் தேதிகள் மிகுந்தஅதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையேஅளிக்கும்.
7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும்.எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும்நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.

அதிர்ஷ்ட வர்ணங்கள்

வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம்ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்புநிறத்தையும் தவிர்க்க வேண்டும். (பல வர்ண) வர்ண உடைகளும்அதிர்ஷ்டமானவை.

7-ஆம் திகதி பிறந்தவர்கள்

வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்குமனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதிபோன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள்.நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்தவிருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள்.மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால்நல்ல வாழ்க்கை அமையும்.

16 ஆம் திகதி பிறந்தவர்கள்

இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத்திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால்திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுபொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாகஇருக்க வேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தைபிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாகஇருப்பார்கள். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்கவேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு.

25 ஆம் திகதி பிறந்தவர்கள்

இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களக்குவழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்பவாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ,நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள்.இவர்கள் நல்ல திறமைசாலிகள். இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டுஎம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்குஉண்மையான சேவைகள் செய்வார்கள்.

எண் 7க்கான (கேதுதொழில்கள்

இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத்தருபவர். தொழில்கள் போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள்.உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது.இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும் தொழில்களில் வெற்றிபெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்குவரும். இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லதுஎதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள்சம்பாதிப்பார்கள். மதவழச் சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர்வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள். மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் உற்பத்தி செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும். மருந்துகள், மருத்துவம்தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும்.

மிகப் பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே! கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், வியாபாரம் போன்றவையும் ஒத்து வரும். பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷசம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்குஅமையும். சூஷ்மமான மூளைத் தொழிலாலான துறை, துறையும்நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள்இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகிய தொழில்களும்நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காககுடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.

நவக்கிரக மந்திரங்கள்  கேது

கேது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கேது தசை அல்லது கேதுஅந்தர் தசையின் போது: கேதுவின் கடவுளான பிள்ளையாரைத்தினமும் வழிபடவேண்டும். தினசரி பிள்ளையார் தரிசனம ஸ்தோதிரம்படிக்க வேண்டும்.

தொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லதுகருப்பு கடுகு கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: செவ்வாய், வியாழக்கிழமை. சிறந்தது.

பூஜை: முற்றிலும் கணேச பூஜை. சிறந்தது.

ருத்ராட்சம்: 9 அல்லது 4-முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]