எண் எட்டில் பிறந்தவர்களின் வாழ்க்கை ராகசியம் இதுதானாம்!

எண்களில் எட்டிற்கு என்று தனி இடம் உள்ளது என்றே சொல்லலாம். எட்டாம் எண்னில் பிறந்தவர்கள் புத்திசாதுர்யம் மிக்கவர்கள்.

இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக வாழ்வார்கள். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க விரும்ப மாட்டார்கள்.

இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.
எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.

எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்களாம். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் வல்லவர்கள். எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும்.

வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு இருக்கும்.

இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக காணப்படுவார்கள்.
கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் காணப்படும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்கள்.

இவர்களின் தேவைக்கேற்றபடி பணவசதியும் காணப்படும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள்.
சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.
இவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது.
சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.

இவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுப்பவை

அதிர்ஷ்ட திகதி 8, 17, 26
அதிர்ஷ்ட நிறம் கருப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிர்ஷ்ட கிழமை சனி, புதன்
அதிர்ஷ்ட கல் நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் ஐயப்பன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]