எங்கே செல்கின்றது மனித இனம்- பச்சிளம் 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறியர்கள்!!

வட மாநிலங்களில் தொடர்ந்து வரும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

இதை அடுத்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 8 மாதமே ஆனா பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காம வெறியர்கள் ,இதை கண்ட உள்ள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் இருக்கும் ராஜ்வாடா கோட்டை அருகே சாலைகளில் பலூன்களை விற்று தனது பிழைப்பை ஓட்டிவரும் தொழிலாளி தனது மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் உறங்கி கொண்டு இருந்தனர்.அடுத்து மறுநாள் காலை விழித்து பார்த்த பொழுது தனது குழந்தையை அங்கு காணவில்லை .

எல்லா இடங்களிலும் தேடி பார்த்தனர் பின்பு அருகில் இருந்த கடைக்குள் தேடி பார்த்த பொழுது குழந்தை அங்கு பிணமாக கிடைத்தது ,

குழந்தையை தீர பரிசோதித்த பிறகு குழந்தையின் தலையில் மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தது. இதை பார்த்த அக்குழந்தையின் பெற்றோர் மனம் உடைந்து போனார்கள் .

இதை பற்றி போலீசாருக்கு தகவல் கொண்டு தெரிவித்தனர். அதன் பின் போலீசார் வந்து விசாரணை செய்தனர்.அதை அடுத்து அந்த பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என ஆய்வு செய்தனர்.குழந்தை பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவர் குழந்தையை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]