எங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை வெட்டினோம் : ஆவா குழுவின் தலைவன் வாக்குமூலம்

எங்களை பின்தொடர்வதாக எண்ணியே பொலிஸாரை வெட்டினோம் என்று கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் ஆவா குழுவின் தலைவன் நிஷா விக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

எங்களை பின்தொடர்வதாக

என்னுடன் முரண்பட்டுக்கொண்டு ஆவா குழுவில் இருந்து விலகி வேறு குழுவை உருவாக்கச் சென்ற தனு ரொக் என்பவரை வெட்டுவதற்கே நாங்கள் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதன் காரணமாக நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தனர். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம் என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.

எங்களை பின்தொடர்வதாக

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு ஆவாக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவின் அங்கத்தவர்கள் ஆறுபேரை யாழ்.பொலிஸார் கடந்தவாரம் கைதுசெய்தனர். அத்துடன், 40இற்கு மேற்பட்ட இளைஞர்கள் இதுவரை யாழில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]