”எங்களுக்கு மிளகாய் பொடி அடித்த மஹிந்த ராஜபக்ச அவர்களே” என வாழ்த்து கூறிய ஐ.தே.க உறுப்பினர்!

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இன்று தனது 73வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இவர் 1945 ஆண்டு பிறந்தார்.

பிறந்த நாளை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் புண்ணிய தான நிகழ்வுகள் இம்முறையும் அபயராம விகாரையில் நடைப்பெற்றது. மேலும் அவரின் பிறந்த நாளை ஒட்டி நாட்டின் பல பகுதிகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், மஹிந்தவின் பிறந்த நாளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் அஜித் பீ பெரேரா நக்கலான முறையில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது , கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்முறையில் இறங்கி அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியதை நினைவூட்டும் வகையில் , “எங்களுக்கு மிளகாய் பொடி அடித்த மஹிந்த ராஜபக்ச அவர்களே! உங்களுக்கு 73 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என அவரின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ச

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]