எக்ஸ் வீடியோஸ்

எக்ஸ் வீடியோஸ் பெண்களுக்கான விழிப்புணர்வு திரைப்படம் என இயக்குனர் சஜோ சுந்தர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வீடியோஸ்

இந்த திரைப்படத்தை ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் இயக்கிய படங்களில் பணியாற்றிய சஜோ சுந்தர் இயக்கியுள்ளார்.

எக்ஸ் வீடியோஸ் திரைப்படத்தில் அபிநவ், நிஜய், ஷான், அஜய் ராஜ், ஆஹிருதி சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

எக்ஸ் வீடியோஸ்

இந்த திரைப்படம் படம் குறித்து இயக்குனர் சஜோ சுந்தர் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த திரைப்படமானது உண்மையான சம்பவம் எனவும், கல்லூரி மாணவிகளையும், குடும்பப் பெண்களையும் இணையதள ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

எக்ஸ் வீடியோஸ்

இதேவேளை படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, கிளுகிளுப்பான படம் என்று நினைக்க வேண்டாம் எனவும், இது ஒரு த்ரில்லர் கதை எனவும் குறிப்பிட்டார்.

இந்த கதையானது உண்மையான கதையாகும். தினமும் கையடக்க தொலைபேசிகளில் ஆபாச வீடியோக்கள் பார்த்து ரசிக்கும் நண்பர் இருக்கிறார். ஒருநாள் அவரது மனைவியின் படம் அந்த இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

எக்ஸ் வீடியோஸ்

அவருக்கே தெரியாமல் அந்த தம்பதியின் அந்தரங்கம் படமாக்கப்பட்ட அந்த வீடியோ, இணையதளத்தில் எப்படி பதிவேற்றம் செய்யப்பட்டது என்று ஆராய்ந்தபோது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே தெரியவந்தது. அதையே படமாக்கியுள்ளேன்.

இந்தப் படத்தில் கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு அரசாங்கப் பள்ளிகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக இயக்குனர் சஜோ சுந்தர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]