முகப்பு News எகிப்து நாட்டின் சோதனைச்சாவடி மீது தாக்குதல் முயற்சி

எகிப்து நாட்டின் சோதனைச்சாவடி மீது தாக்குதல் முயற்சி

எகிப்து நாட்டின் சோதனைச்சாவடி மீது தாக்குதல் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது, எகிப்து நாட்டின் சினாய் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் நடத்த முயன்தாக கூறப்படுகின்ற நிலையில், இத்தாக்குதல் நடத்த முயன்ற நான்கு பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்களையும் பொலிஸ் கைப்பற்றியுள்ளனர்.

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் உள்ள மசூதியின் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணகானவர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அதிபர் அப்ட்டெல்-ஃபட்டா அல்-சிசி உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com