எகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

எகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பதுங்கியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஆய்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

எகிப்து நாட்டின் பல பகுதிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

எதிர்பாரா வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த வன்முறை தாக்குதல்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொலிஸாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிரடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]