ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனுத்தாக்கல்

பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் முழந்தாழிடச் செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், விசாரணைகள் எவையும் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என, குறித்த வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]