ஊவா மாகாண முதலமைச்சருக்கு பிணை

ஊவா மாகாண முதலமைச்சருக்கு

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை அச்சுறுத்தி மண்டியிடவைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பிணை வழங்கப்பட்டள்ளது.

அவரை பிணையில் விடுவிப்பதாக பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் நயன்த சமரதுங்க இன்று உத்தரவிட்டார்.

இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை பொலிஸில் சரணடைந்த நிலையில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]