ஊழியர் சேமலாப நிதி மீது வரிவிதிக்க அரசு நடவடிக்கை : ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஊழியர் சேமலாப நிதி மீது வரிவிதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.

ஊழியர் சேமலாப நிதி

இலங்கையில் 1350 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியாக காணப்படுகிறது. இந்தப் பணம் அரசின் பணமல்ல. தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களினதும், முதலாளிமார்களும் நிர்வகிக்கும் பணமாகும்.

அரசுக்கும் இந்த நிதிக்கும் உள்ள தொடர்பு அதனை பொறுப்பாக வழங்குவதாகும். திறைசேரி பிணைமுறி விநியோகிப்பதால் 960 கோடி ரூபா ஊழியர் சேமலா நிதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழியர் சேமலா நிதியில் 10 வீத வரியை பெற்றுக்கொள்ள அரசு சட்ட உபாய மார்க்கங்களை செய்திருந்தது. தேசிய வருமான திணைக்களம் இன்றைவரை குறித்த வரியை பெற்றுக்கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க 14 வீத வரியை பெற்றுக்கொள்ளும் உபாய மார்க்கத்தை கையாள எண்ணியுள்ளார். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]