ஊழலால் பதவியிழந்த தென் கொரிய அதிபர்

தென்கொரியாவில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் குன் ஹெ தலைமையிலான அரசு, எந்தவிதமான தகவல்களையும் விட்டுச் செல்லவில்லை என்று ஆளும் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வெளியேறிய முந்தைய அரசு, வெறும் பத்து பக்க ஆவணத்தை மட்டுமே ஒப்படைத்துச் சென்றிருப்பதாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஓ யாங்-ஹுன் தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் குன் ஹெ, தற்போது விசாரணைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.ஊழலால் பதவியிழந்த

தென்கொரிய சட்டங்களின்படி, பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் தன்னைப் பற்றிய ஆவணங்களை முடக்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முந்தைய அதிபரின் ஆட்சியில், 26 காகிதம் வெட்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]