‘ஊர்காவற்துறை பிரதேச சபை’க்கு எதிராக தம்பாட்டி கடற்கரையில்  போராட்டம் முன்னெடுத்துள்ளதுடன், தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊர்காவற்துறை தம்பிட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே ‘ஊர்காவற்துறை பிரதேச சபை’யின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அந்த போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 60 வருடங்களுக்கு மேலாக கடலுணவுகளை அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்து, விற்பனை செய்து வருகின்றது.

அங்கத்தவர்களின் நலன் சார்ந்தும், கூட்டுறவின் ஒற்றுமையின் அடிப்படையிலும் 2012 ஆம் ஆண்டு முதல் பிரதேச சபையின் அனுமதிப் பத்திரத்தினைப் பெற்று இன்று முதல் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.

2013 ஆம் ஆண்டில் இருந்து வியாபார அனுமதிப் பத்திரத்தினைப் பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், 2018 ஆம் ஆண்டிற்கான அனுமதிப் பத்திரத்தினைப் பெறுவதற்குரிய விண்ணப்ப படிவமும் பெற்று அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது பிரதேச சபை தமது வியாபார நடவடிக்கையினைக் குழப்பும் வகையில் 2014 ஆம் ஆண்டு எமது கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மீன்பிடிக் கிராமம் என்ற அடிப்படையில் மரக்கறி சந்தையினை அமைத்துத் தருமாறு கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம்.

தற்போது, பிரதேச சபை தமது பிரச்சினைகளைக் குழப்பும் நோக்குடன் தன்னிச்சையாக மரக்கறிச் சந்தையினை மீன் சந்தையாக மாற்றி அமைப்பதற்குரிய காலக்கெட்டினை விதித்து பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர் சங்கத்தில் அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையினை அநீதியாக மீன் சந்தையாக மாற்றுவதற்கு பிரதேச சபை முனைகின்றது. முக்களின் விருப்பத்திற்கு மாறாக மரக்கறிச் சந்தையினை மீன் சந்தையாக மாற்றி முயல்கின்றார்கள்.

ஊர்காவற்துறை பிரதேச சபையின் செயலாளரை மக்கள் சந்திக்கச் செல்லும் போது, செயலாளரை சந்திக்க முடியாது. ஆரசியல்வாதிக்கு இருக்கும் பாதுகாப்புப் போன்று தான் பிரதேச செயலாளருக்கும் பாதுகாப்பு உள்ளது.

மெனோ பலியை நிறுத்தும் வகையில், அன்று இருந்த உத்தியோகத்தர்கள் கடலுணவு உற்பத்தி செய்வதனை ஏற்பாடு செய்து அதனூடாக மெனோ பலியை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால், இன்றுள்ள அதிகாரிகள், அவ்வாறு நடந்துகொள்கின்றார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

பிரதேச சபை உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கும் மகஸர் அனுப்பி வைத்தும் அந்த மகஸருக்கான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

அரச அதிகாரிகளும் எமது வாழ்வாதாரத்தினைச் சுரண்ட தயாராக இருக்கின்றார்களா அல்லது மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை விட்டு கூலித் தொழிலுக்குச் செல்வதற்கு விரும்புகின்றார்களா என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

60 வருடங்களுக்கு மேலாக கடல் உணவினைக் கொள்வனவு செய்து சந்தைப் படுத்துகின்றோம். ஊர்காவற்துறை பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கும் இந்த கடல் உணவுகள் கிடைக்க வேண்டுமென்பற்காக சிறிய சந்தையில் வைத்து விற்பனை செய்கின்றோம். பிரதேச சபையின் செயற்பாட்டினால், அந்த சந்தை கூட மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றது.

முன்னாள் செயலாளருடன் கலந்துரையாடியே சந்தை அமைக்கப்பட்டது. ஆனால், இன்றுள்ள செயலாளர் மக்களுடன் கதைப்பதும் இல்லை கதைக்க முற்படுவதுமில்லை. பிரதேச சபையின் செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமது கோரிக்கையினை நிறைவேற்றவிடின், பிரதேச சபையை முற்றுகையிட்டு, தமது போராட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் தம்பாட்டி கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]