ஊபர் வண்டிகளுக்கு லண்டனில் தடை

லண்டனில் ஊபர் தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது.ஊபர்

இந்த பயண செயலி நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டி எப் எல் (TFL – Transport for London) கூறியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதிப்படுத்தியுள்ள ஊபர், மிகவும் வெளிப்படையான செயல்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டியதாகவும், நவீன செயல்பாடுடைய நிறுவனங்களுக்கு லண்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.ஊபர்

லண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன ஓட்டிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர்.

ஊபர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் “லண்டன் போக்குவரத்து துறையான டி.எல்.ஃப் மற்றும் லண்டன் மேயரும், பயன்பாட்டாளர்களின் வாய்ப்புகளை குறைக்க முயலும் சிறிய குழுவின் பக்கம் சாய்ந்துவிட்டனர்” என கூறியுள்ளது.