ஊட்டச்சத்து இன்மையால் தோட்ட மக்களுக்கு ஆபத்து : உலகவங்கி எச்சரிக்கை

இலங்கையின் பெருந்தோட்டப் புறத்தைச் சேர்ந்த மக்கள் தமது ஊட்டச்சத்து நிலையை எவ்வாறு மேம்படுத்த முடியும்? என சுட்டிக்காட்டி முக்கிய பல தகவல்களுடன் உலகவங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இலங்கையில் தாய்மார் மற்றும் ஐந்து வயதுக்கு குறைந்தவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து இன்மை என்பது தமது மனித ஆற்றலை அடைவதிலிருந்து தடுக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பெருந்தோட்டப் புறத்தில் உள்ளவர்களே அதிக ஆபத்தினைக் கொண்டுள்ளனர்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவை உகந்த விலைக்கு பெற முடியாத மோசமான உணவுப் பழக்கம் போதிய தகவல் இன்மை மற்றும் தவறான பண்பாட்டு நம்பிக்கைகள் உளப்பாங்குகள் என்பன ஊட்டச்சத்து இன்மைக்கான காரணங்களாகும்.

பெருந்தோட்டத் துறையில் நடத்தைசார் மாற்ற தொடர்பாடலுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்தல் ஊடாக ஊட்டச்சத்தை மேம்படுத்தலாம்.
கம்பளையில் பெருந்தோட்டப் பணியாளர்கள் நூதனசாலை மற்றும் ஆவணகத்தில் காலம் அசைவற்று இருக்கின்றது. நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த லயன் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள நூதனசாலையானது இலங்கையில் பெருந்தோட்டத்துறை பணியாளர்களின் வாழ்க்கை எவ்வாறானதாக இருந்தது என்ற உணர்வை வெளிப்படுத்த முயற்சிக்கின்றது.

அண்ணளவாக 10 10 அடி கொண்ட முதலாவது அறை முழுமையான களிமண் சுவர்கள் மற்றும் அடிப்படை அடுப்பு அதற்கு மேலே தொங்கும் சில சட்டிஇ பானைகள் என்பவற்றுடன் முழுமையான வீடாக மாறியிருக்கின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பின் தரம் என்பது தொடர்ந்தும் சிக்கலாக காணப்படுகின்ற நிலையில் கடந்த காலங்களில் இந்த சமுதாயத்தில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
2002 மற்றும் 201213 காலப்பகுதிக்கு இடையில் 30 வீதத்திலிருந்து 10.9 வீதமாக வீழ்ச்சி கண்டு 19 வீதத்திற்கும் மேலாக கடும் வறுமையின் கீழ் வாழும் இந்த மக்களின் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது
இன்று லயன் அறைகளில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி சேவை மற்றும் கைபேசிகளுக்கான அணுகும் வசதிகள் உள்ளன. எவ்வாறாயினும் அதே விதத்தில் ஊட்டச்சத்து நிலைமையானது மேம்படவில்லை.

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் ஊட்டச்சத்து மதிப்பீட்டாய்வானது தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்ட மக்கள் தொகையை இலக்கு வைத்து மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவா மற்றும் தென் மாகாணங்கள் உள்ளடங்கலாக 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சவால்களை அவை சுட்டிக்காட்டின.

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் ஊட்டச்சத்தின்மையை கையாள்தலுக்கு பன்முக அணுகுமுறைகள் தேவையாகும்.

சிறுவர்கள் மற்றும் பெண்களின், சிறுமிகளின் தற்போதைய நிகழ்ச்சிகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு மற்றும் வலுவான நம்பகத்தன்மைக்கு பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் கண்காணித்தல் மற்றும் ஓருங்கிணைப்புச் செயற்பாட்டு வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதியான தேவை உள்ளது. சேவை வழங்கப்படாதோரை சிறப்பாக இலக்கு வைப்பதற்கும் எட்டுவதற்கு ஊட்டச்சத்து சேவை விநியோகத்திற்கான புதிய மிகைநிரப்பு மாதிரிகளை விருத்தி செய்வதற்கு சுகாதார மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஊட்டச்சத்து

தாய்மார்கள் மற்றும் ஏனைய சிறுவர் பராமரிப்பு வழங்குபவர்கள், சமுதாயம் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் நீண்ட கால சுகாதார மற்றும் பொருளாதார தாக்கம் போன்ற விடயங்களைச் சூழ மற்றும் வாழ்க்கையின் முதல் 1, 000 நாட்களின் போது வளர்ச்சி குறைதலின் பொருளாதார தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்ட பெருந்தோட்டத் துறைக்கான முழுமையான நடத்தைசார் மாற்ற தொடர்பாடல் உபாயம் ஒன்றை பரிந்துரைக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]