ஊடக நிலை குறித்து ஜனாதிபதி கருத்து

தற்போதையை அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடக சுதந்திரம் சிறப்பான நிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அண்மையில், கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் பரவாமல் தடுக்கவே சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறுபான்மை – பெரும்பான்மை என மக்களை பிரித்து பார்ப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்; ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் வசிக்கும் சகலரும் இலங்கையர் என்ற உணவுடன் சேவையாற்றுவதே தனது எதிர்ப்பார்ப்பு என்றும் ஜனாதிபதி, பீ.பீ.சிக்கு கூறியுள்ளார்.

அத்துடன், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளில் 80 சதவீதமானமை விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]