ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி

மட்டக்களப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று (28) நடைபெற்றது.

ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]