ஊடகவியலாளர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்: ரவி கருணாநாயக்க

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அனைத்து ஊடகவியலாளர்களும் தமது சொத்துக்களையும் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களையும் அறிவிக்கவில்லை என ஊடக அறிக்கையை குறிப்பிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஊடகவியலாளர்களின் சொத்துக்களையும் பொறுப்புகளையும் கோர அதிகாரங்கள் எதுவும் வரையறுக்க படவில்லை என கூறினார்

இதற்கிடையில், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க ஊடக அமைச்சினால் இது செய்யப்பட முடியும் என முன்மொழிந்தார்.