அரசியல் இலாபங்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நலனுக்காகவும் சினிமா விநியோக உரிமையை அரசமயமாக்கப்பார்க்கிறதா?

அண்மைய நாட்களில் இலங்கையின் வர்த்தக துறையினரால் பெரிதும் பேசப்பட்டு கொண்டிருக்கும் விடயம் தனியார் துறையிடம் இருக்கும் விநியோக உரிமையை அரசு பொறுப்பேற்பது பற்றியதாகும். தற்போது இலங்கையில் அரச திரைபட கூட்டுத்தாபனம் (NFC) உட்பட 05 பெரிய விநியோக நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில்( CEL-Cinema Entertainments (Pvt) Ltd, MPI- Movie Producers & importers, LFD- Lanka Film Distributors,EAP-Film & Theatres) போன்ற நிறுவனங்களை அரசு பொறுப்பேற்று அரசே தன்னிச்சையாக திரைப்படங்களின் விநியோகத்தினை மேற்கொள்ள உள்ளது.

உள்ளூர் சினிமா துறை உள்ளூர் சினிமா துறை உள்ளூர் சினிமா துறை

தனிப்பட்ட நபர்களின் இலாபங்களுக்கும் ,அரசியல் பழிவாங்குதலிற்கும் தனியார் துறையிடம் இருக்கும் விநியோக உரிமையை அரச திரைப்பட கூட்டுத்தாபனம் கையேற்க போவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்றும் ஒரு மாத காலப்பகுதியில் முழு இலங்கைக்குமான திரைப்பட விநியோக உரிமையை அரச திரைப்பட கூட்டுத்தாபனம் ஏகபோகமாக்கி கொள்ள போகிறது.

அரசியல் மயமாக்களுக்கு எதிராக தனியார் துறையினர் முன்வைக்கும் வாத
விவாதங்கள்

அரசாங்கத்திடமிருந்து விநியோக உரிமையை 2001 ம் ஆண்டு தனியார் துறைக்கு வழங்கிய பின்னர் 80 க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டமைக்கு தனியார் துறையினர்தான் காரணமா?

01) மூடப்பட்ட திரை அரங்குகளில் அதிகமானவை கிட்ட தட்ட 30 திரையரங்குகளுக்கு மேற்பட்டவை தேசிய திரைப்பட கூட்டு தாபனத்திற்கு சொந்தமானவை. ஆக மூடப்பட்ட திரையரங்குளில் அதிக பங்கை வகிக்கும் அரச கூட்டுத்தாபனத்தால் மற்ற தனியார் துறையினரை எப்படி குறை கூற முடியும்?

02) பொருளாதாரமயமாகி வரும் நாட்டில் ஒரு முதலீட்டாளன் அதிகம் இலாபம் ஈட்ட
கூடிய எந்த துறையையும் தெரிவு செய்யலாம் அந்தவகையில் முதலீட்டாளர்கள் வேறு
துறையில் முதலீடு செய்யும் போது கூட திரை அரங்க எண்ணிக்கைகள்
குறைவடைந்திருக்கலாம்.

03) திரையரங்க பராமரிப்பு செலவு கூடுதலாகவும், உலகமயமாக்கலின் காரணமாக CD, DVD, ONLINE LIVE, LIVE STREAMING வருகையின் காரணமாகவும், திரையரங்குகள் நிர்வாக திறனின்மையின் காரணமாகவும் கூட திரை அரங்க எண்ணிக்கைகள் குறைவடைந்திருக்கலாம்.

உள்ளூர் சினிமா துறைv

02) திரையரங்க அபிவிருத்தில் தனியார் துறை திரை அரங்குகள் பின்னடைவில் இருக்கின்றவா?

01) திரைஅரங்கங்கள் தனியார் நிறுவங்களின் கீழ் 2001ம் ஆண்டு ஒப்படைத்த பின்னர் பல திரையரங்குகள் தனியார்துறையினரால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன.

02) விநியோக நிறுவனங்களின் கீழ் இருந்த திரை அரங்குகளை டிஜிட்டல் மயமாக்க
முன்வந்த போது அதற்க்கு தடையாக இருந்தது அரச கூட்டுத்தாபனம் என்ற
குற்றச்சாட்டும் நிலவுகிறது.முன்னைய காலப்பகுதிகளில் திரையரங்குகள் டிஜிட்டல் மயமாக்க முற்பட்ட போது அரசாங்கம் தடையாக இல்லாவிட்டால் எப்பொழுதோ திரை அரங்குகள் அபிவிருத்தி அடைந்திருக்கும்.

03) திரையிடும் பொழுது இலாபம் ஏட்பட்டால் சகல கட்சிகளும் அனுபவிக்கிறார்கள்
ஆனால் நட்டம் ஏற்பட்டால் மாத்திரம் இறக்குமதியாளர்களையே சாருகின்றது, இந்த
நட்ட அச்சத்தை திரை அரங்க உரிமையாளர்களோ, அரசோ பொறுப்பேற்பதில்லை.

உள்ளூர் சினிமா துறை

04) இலங்கையில் சிங்கள சினிமா திரைப்பட துறை வீழிச்சியடைந்து வருவதற்கு தனியார் துறை விநியோகஸ்தர்கள்தான் காரணமா?

01) இலங்கையில் சினிமா ரசிகர்கள் உலகளவில் சினிமா படங்களை ரசிக்கும் போது, உள்ளூர் சினிமா இன்னும் வளர்ச்சியடையாது இருக்கிறது, இதனால் எந்த
திரையரங்கில் படத்தை காட்சிப்படுத்தினாலும், அப் படத்தை திரையிலிருந்து அகற்றும்  நிலைமைதான் உருவாகும். இதற்க்கான முடிவை பார்வையாளர்களே எடுக்கின்றனர்.

02) உள்ளூர் படங்களில் சில மாபெரும் வெற்றி பெருகின்றன, சில படுதோல்வி
அடைகின்றன. இது அரச கூட்டுத்தாபனத்தின் வெளியீடு ஆனாலும் சரி தனியார்
துறை வெளியீடு ஆனாலும் ஆனாலும் சரி. இங்கு படத்தின் தரமே முக்கியத்துவம்
பெறுகிறது .

03) பல சிங்கள படங்களின் தயாரிப்பிற்கும் உள்ளூர் தமிழ் படங்களின் தயாரிப்பிற்கும் விநியோக நிறுவனங்களும் முதலீடும் செய்து ஊக்குவிப்பும் செய்திருக்கின்றன.முன் உதாரணமாக அண்மையில் வெளிவந்த “கோமாளி கிங்ஸ்” தமிழ் திரைப்படம் நல்ல சான்று.

04) இலங்கையில் வெளியாகும் பெரியளவிலான படங்களாட்டும் சிரியளவான
படங்களாகட்டும் பெரும்பாலான படங்கள் இந்த தனியார் துறையினரின்
கம்பெனிகளுடாகவே வெளிவருகின்றன. இதன் பின்னணி கரணங்கள் எதுவெனில் பட இறக்குமதிக்கு ஒரு பாரிய முதலை முட்பனமாக வழங்கி இறக்குமதியாளனாக
செற்படுவதும் தரமான சேவையாகும்.

உள்ளூர் சினிமா துறை

உள்ளூர் சினிமா துறையை கடந்த காலத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்

கடந்த 2001 ம் ஆண்டு கலப்பக்கத்திற்கு முன்னர் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் 5 அல்லது 10 திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு புதிதாக வந்த மற்றைய நேரங்களில் பழைய  படங்கள் 2ம் 3ம் ஓட்டங்களாக நெடுநாட்கள் காண்பிக்கப்பட்டன. இதனால் பல திரையரங்குகளுக்கு மூடு விழா நடந்தது ஞாபகமிருக்கும் அந்த யுகத்தை நோக்கி அரசு மீண்டும் நகர்கிறது.

இதுவரை காலமும் 60 ற்கும் மேற்பட்ட திரை அரங்குகள் அரசின் கீழ் இயங்கி கொண்டு வந்திருந்தாலும் கூட அரசுக்கு சொந்தமான ஒரு திரை அரங்கை கூட உருவாக்கி கொள்ள முடியவில்லை.பல திரையரங்குகள்அரசின் கீழ் மூடப்பட்டும் இருக்கின்றன.

உண்மையிலேயே தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தைவிட இங்கு இருக்கும் விநியோக நிறுவனங்கள் பட விநியோகம், பண வசூலிப்பு, பணம் மீள்செலுத்துதல், தொழிநுட்பம், விரிவாக்கம் அபிவிருத்தி, சந்தைப்படுத்தல், தரமான சேவை என வியாபாரத்தின் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது.இந்த அடிப்படையில் வினை திறனற்று காணப்படும் அரச திரைப்பட கூட்டுத்தாபனம் தனது நிறுவனத்தையே நிர்வகிக்க முடியாத போது ஏன் சினிமா துறையை அரசியல் மயமாக்க பார்க்கிறது?

உள்ளூர் சினிமா துறை

இன்றைய சினிமா துறையின் நிலை

இன்று சிந்தித்து பாருங்கள் 05 வலயங்களிலிருந்து 02 கிழமைகளுக்கு 01 படம் என்ற விதம் விநியோகிக்கப்படும் பொழுது திரையரங்க உரிமையாளர்கள் தமக்கு தேவையான திரைப்படத்தினை தெரிவு செய்து கொள்ளவும், தரமற்ற படங்கள் வெளியாகும் போது நிராகரிக்கவும் ,தரமான உட்பதியை வழங்கி பார்வையாளர்களை திருப்பதி படுத்தவும் முடிகிறது. ஆக ஒரு வலயத்திற்கு மாதத்திற்கு தலா 5 (02 தமிழ் ,01 ஹிந்தி, 02 ஆங்கிலம்) வெளிநாட்டு படங்கள் வெளியிட்டாலும் 5 வலயத்திலிருந்தும் 25 படங்கள் வெளியாகும் போது
எவ்வளவு வருமானத்தை திரை அரங்க உரிமையாளர்களால் ஈட்டி கொள்ள முடிகிறது.
பெரிய தொகையை முதலீடு செய்து இறக்குமதி செய்யும் படங்கள் மூலம் நட்ட அச்சத்தை பங்குகொள்வது இறக்குமதியாளர்களும் ,விநியோகஸ்தர்களும்தான். கடந்த காலங்களில் வெளி வந்த காலா, விவேகம், AAA, FAN, TIGER ZINDA HAI மட்டும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரை படங்கள் இறக்குமதியாளர்களுக்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியது.

இப்பொழுது சுமார் ஒரு வருடத்திற்க்கு 10 படங்கள் என்ற அடிப்படையில் 05 வலயங்களில் இருந்தும் 50 சிங்கள படங்கள் வெளிவருக்கின்றது.
பெரிய தொகையை முதலாக வழங்கி திரை பட கொள்வனவினை மேற்கொள்ளும் இறக்குமதி நிறுவனங்களுக்கு தேவையான முதலில் ஒரு பாரிய பங்கினை விநியோக நிறுவனங்கள் வழங்கி, பெரிய படங்களை உள்நாட்டுக்கு கொண்டு வர வழி செய்கிறது.இதை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் செய்ய முடியுமா ? ஒருகாலும் இதை செய்ய கூடிய வாய்ப்புகள் குறைவு.

உள்ளூர் சினிமா துறை

சினிமா துறையை அரசு பொறுப்பேற்றால் ஏற்பட போகும் பின் விளைவுகள்

அரச திரைப்பட கூட்டுத்தாபனம் தமக்கு விரும்பிய படங்களை குறைந்த விலையில்
கொள்வனவு செய்து திரையரங்க உரிமையாளர்களின் விருப்பு ,வெறுப்புக்கு இடமின்றி இரண்டொரு வெளிநாட்டு படங்கள் மாதம் விநியோகிக்கப்படும். இதனால் தெரிவு சுதந்திரத்தை இழக்கும் திரை பட உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடும் நிலைமை உருவாகும்.

அத்தோடு அரச கூட்டு தாபனம் வருடத்திற்கு 20 சிங்கள படங்கள் கூட விநியோகிக்க
முடியாது.காரணம் ஒரு மாதமாவது ஒரு சிங்கள படத்தை ஓட்ட வேண்டும்.அப்படியே ஒரு நேரத்தில் 02 ,03 படங்கள் வெளியிட்டாலும் எந்த திரையரங்கில் எந்த படத்தை
வெளியிடுவது, எந்த நேரத்தில் வெளியிடுவது என்ற முக்கியத்துவ பிரச்சனை உருவாகும்.

இது மேலும் பெரிய முதலீட்டாளர்களையும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களையும்
பாதுகாத்து சிறிய முதலீட்டாளர்களையும், இயக்குனர்களையும் பாதிப்படைய செய்யும்.

இது மேலும் சினிமா துறையை வீழ்ச்சியடைய செய்யுமே தவிர வளர்ச்சியடைய செய்யாது.

உள்ளூர் விநியோக நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு கம்பெனிகளான லைக்கா(LYCA) மற்றும் PVR போன்ற நிறுவனங்கள் பாரிய முதலீட்டை மேற்கொண்டுள்ளன.இன்னும் எதிர் காலத்தில் பல நிறுவனங்கள் படத் தயாரிப்பிலும் முதலீடு செய்யும். ஆனால் இந்த வாய்ப்பை அரசு கைநழுவி போக செய்கிறது. இதனால் பாரிய முதல் உட்பாச்சப்படுவதை அரசு தடுக்கிறது.
இந்த விநியோக நிறுவனங்களில் இருந்து பெரும் படங்களை முதலாக வைத்து திரை அரங்க உரிமையாளர்கள் கடன்களில் ஓடி கொண்டு இருக்கின்றார்கள். இதனால் ஒவ்வரு திரை அரங்குகளில் இருந்தும் பாரிய முதல் விநியோக நிறுவனங்களுக்கு வருமாதியாக உள்ளது. அத்தோடு தன்னிடம் இருக்கும் விநியோக உரிமையை அடிப்படையாக வைத்து கொண்டு திரைப்பட தயாரிப்புகளில் முதலீடு செய்திருக்கும் நிறுவனகளின் பெருந்தொகையான முதலீடு என்னவாகும்?

ஒரு நாட்டின் பொருளாதார கொள்கையின் முதுகெலும்பு அந்த நாட்டின் முதலீட்டாளர்கள் என்ற வகையில் அரசு தன் முதலீட்டாளர்களை பாத்துகாக்க வேண்டும். ஆனால் விளைத்திறனோடு இலாபமீட்டி கொண்டிருக்கும் நான்கு பாரிய நிறுவனங்களை பறிமுதல் செய்யும் போது முதலீட்டாளர்களின் முதுகெலும்பை உடைக்கிறது.

இதனால் பாரியளவிலான நிதி வெளி நாட்டு சந்தைக்கு வெளிப்பாச்சப்பட போகிறது.அது மட்டுமல்லாது இந்த 04 பாரிய கம்பெனிகளை நம்பியிருக்கும் 400 க்கும் மேற்ப்பட்ட நேரடி மட்டும் மறைமுக தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் நிலைமையும் அரசு ஆராயவில்லை.

உள்ளூர் சினிமா துறை

உள்ளூர் சினிமா துறை

எனவே..

முதலில் அரசாங்கம் தன்னை ஒரு வினைத்திறனான வியாபாரியாக நிலை நிறுத்த வேண்டும் அதன் பின்னர் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் .அத்தோடு இலங்கையின் சினிமாத்துறையை உலக அளவிற்கு வியாபிக்க கொள்கை உருவாக்க வேண்டும்.

தன்னை ஒரு கட்டுப்பாட்டாளனாக வைத்து கொண்டு தனக்கு கீழ் இருக்கும் மற்றய
திரையரங்குகளையும் தனியாருக்கு விடுவிக்க வேண்டும். பட விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பட விநியோகத்தில் ஒரு குறிப்பிட்ட சத வீதத்தை எல்லா திரை அரங்குகளிலிருந்தும் வசூலித்து உள்ளூர் சினிமா துறை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

பட விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள்,
இறக்குமதியாளர்கள் என சினிமா துறையில் தொழில் புரியும் சகல கட்சிகளையும் முக்கியமாக திரை பட பார்வையாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.

உள்ளூர் சினிமா துறை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]