உள்ளூர் கிரிக்கட் தொடரில் தேர்வு செய்யபடாததால் தீக்குளிக்க முயன்ற வீரர்

உள்ளூர் கிரிக்கட்பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் ஒருவர், தான் உள்ளூர் கிரிக்கட் தொடரில் தேர்வு செய்யபடாததால் போட்டியின் நடுவே மைதானத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கட் போட்டிகளை லாகூர் நகர கிரிக்கட் அசோசியேசன் தலைமையேற்று நடத்தி வருகிறது.

போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ஒருவர் திடீரென மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடியுள்ளார்.

அவர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விரைந்த அதிகாரிகள் அவரை தடுத்து காப்பாற்றினர்.

இதுகுறித்து தீக்குளிக்க முயன்றவர் கூறியதாவது:-

நான் கிளப் மற்றும் ஜோனல் அளவில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன். ஆனால் தேர்வு குழுவினர் என்னை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். லாகூர் அணிக்காக நான் விளையாட வேண்டும் என்றால் பணம் கேட்டனர். ஆனால் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்றார்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் அந்த கிரிக்கட் வீரருக்கு உறுதியளித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]